மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்த கோவை அதிமுக எம்.எல்.ஏக்கள் - ஜவுளித்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து மனு…!

ஜவுளித்துறையில் நிலவி வரும் சிக்கல்களுக்கு தீர்வு காணுமாறு மத்திய இணை அமைச்சர் பியூஸ் கோயலிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ க்கள் -- கே. ஆர்.ஜெயராமன், அம்மன் கே அர்ஜுனன் உள்ளிட்டோர் நேரில் ச்ந்தித்து மனு அளித்தனர்.


கோவை: கோவையில் நேற்று"டெக்ஸ் பேர் 2022" என்ற ஜவுளித்துறை இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் கண்காட்சியை, மத்திய இணை அமைச்சர் பியூஷ் கோயல், கொடிசியா அரங்கில் துவக்கி வைத்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, கோவை வந்துள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை, நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஜவுளித்துறையினர் சந்தித்து வரும் சவால்களை குறித்து மனு அளித்தனர்.

இந்த நிலையில், தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அவரை இரவு முன்னாள் அமைச்சர்எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ க்கள் -- கே. ஆர்.ஜெயராமன், அம்மன் கே அர்ஜுனன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். இந்நிகழ்வின், போது மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு எம்.எல்.ஏவானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



இதனை அடுத்து ஜவுளித்துறையில் நிலவி வரும் சிக்கல்களுக்கு தீர்வு காணுமாறு மனுவை, எஸ்.பி வேலுமணி, மத்திய இணை அமைச்சர் பியூஸ் கோயலிடம்அளித்தார். அவர் அளித்த மனுவில் கைத்தறி விசைத்தறி நூற்பாலைகள், ஆடை உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் தொடர்பாக உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சுவிலையில்ஏற்பட்டு வரும் ஏற்ற, இறக்கம் தொடர்பாகவும், கைத்தறி விசைத்தறி ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் ஊழியர்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளை கட்டுப்படுத்த வேண்டும், என கோரியுள்ளனர். மேலும், வட மாநில தொழிலாளர்கள் பலரும் இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கு உணவு தங்குமிடம் போன்றவற்றில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.



ஜவுளி சந்தை தற்போது அகமதாபாத்தில் மட்டுமே உள்ள நிலையில்,விவசாயிகள் பயனடையும் வகையில் ஜவுளி சந்தையை கோவையிலுள்ள சோமனூர், பல்லடம் அல்லது காரணம்பேட்டை பகுதியில் அமைத்திட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், ஜவுளித் துறை ஊழியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் வாயிலாக மானியம் வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும், சத்தியமங்கலம் சாலையில்கோவையிலிருந்து கணபதி வரையிலான ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியாசாலை மிகவும் மோசமாக உள்ளதால், அதனை சீர்படுத்தி கொடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், வெறும் மனு அளிப்பதற்காக கோவையை சேர்ந்த அனைத்து அரசியல் பிரமுகர்களும் ஒரே இடத்தில் கூடி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...