கோவை வீரபாண்டி பிரிவு அருகே தனியார் பேருந்து மோதி சாலையை கடக்க முயன்ற பெண் பலி…!

மேட்டுபாளையம் சாலை வீரபாண்டி பிரிவு அருகே ஊட்டியை சேர்ந்த போஜன் என்பவரது மனைவி பார்வதி (62) என்ற பெண் சாலையை கடக்க முயன்றார். அப்போது, மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது.


கோவை:கோவை - மேட்டுபாளையம் சாலை வீரபாண்டி பிரிவு அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி சாலையை கடக்க முயன்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சாலையில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்பட்டு அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை சுமார் 6 மணியளவில், மேட்டுபாளையம் சாலை வீரபாண்டி பிரிவு அருகே ஊட்டியை சேர்ந்த போஜன் என்பவரது மனைவி பார்வதி (62) என்ற பெண் சாலையை கடக்க முயன்றார். அப்போது, மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது.

விபத்தில்,தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தபெரியநாயக்கன்பாளையம் போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து

விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சாலையை கடக்க முயன்ற பெண் மீது தனியார் பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் சிக்கி ஒரு உயிர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...