பொது இடங்களில், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: கொரோனா பரவல் எதிரொலி காரணமாக,கோவையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றுமாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் ஒரு நாள் பாதிப்பு 84 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில், கொரோனா பரவலை கட்டுபடுத்த, மீண்டும் நோய் தடுப்பு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம்
அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைஅதிகரித்து வருவதால், தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல, மாநகராட்சி ஆணையாளர் பிரதீப் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டு முக்கியமான பகுதிகளில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
பொது இடங்களில், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.