ரேஷன் கடைகளை மாடர்ன் ஆக்குவதற்கு நடவடிக்கை-உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் பேட்டி..!

பொருட்கள் வாங்காத அட்டையாளர்களை கண்டறிந்து அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது உள்ள கடைகளை தரம் உயர்த்தி மாடர்ன் கடைகளாக மாற்றுவதற்கு முதல்வர் ஒப்புதலுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.



கோவை: கோவை பீளமேடு பகுதியில் நியாய விலை கடையில் உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 2.21-ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.



மேலும், இரவு நேரத்தில் கேரள எல்லை சோதனைச் சாவடிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் 34,777-நியாயவிலைக்கடைகள் உள்ளதாகவும், கோவையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாகவும், தெரிவித்த அவர் இங்கு ஆய்வு மேற்கொண்டதில், பொதுமக்கள் பலரும் முதியவர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும், சில கருவிகளில் பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள பணியாளர்களும் அதை தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார். மேலும் பல நேரங்களில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும், தரமான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளதாக கூறினார்.

எனவே, நியாயவிலைக் கடைகளில் விற்பனை ஆகாத பழைய அரிசி போன்றவற்றை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் குடோனுக்கு அனுப்புமாறு பணியாளர்களிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும், பல்வேறு இடங்களில் மாதிரி கடைகள் உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நியாயவிலைக் கடைகளில் வாங்காத அட்டையாளர்களை கண்டறிந்து அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தற்பொழுது உள்ள கடைகளை தரம் உயர்த்தி மாடர்ன் கடைகளாக மாற்றுவதற்கு முதல்வர் ஒப்புதலுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.



மேலும், அமுதம் காமதேனு கடைகளை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார். தற்பொழுது விவசாயிகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு செப்டம்பர் முதலிலேயே கொள்முதல் செய்வதற்கு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகவும், அதேசமயம் நாங்களும் தங்களை தயார் படுத்திக் கொண்டு உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும், நமது மாநிலத்தில் வழங்கப்படக் கூடிய அரிசி வேறு மாநிலத்திற்கு சென்று பாலிஷ் செய்து வேறு மாநிலங்களில் விற்பனை செய்வதை தடுக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து 2853 புகார்கள் வந்துள்ளதாகவும் 901 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், இதற்காக தமிழகத்தில் 41 எல்லை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்தத் துறை தரமான பொருட்கள் மட்டுமல்லாமல் அதன் விலைகளையும் கண்காணித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு எம்டிசிசி வங்கி மூலமாகவும் மிகப்பெரிய உதவிகள் வழங்கப்பட்டு அதனை செய்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...