கோவை பொள்ளாச்சியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்..!

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அந்தந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளைக் கல்வி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் மேற்படிப்புக்காக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படுவதால், இன்று முதல் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அந்தந்த தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...