கோவையில் பல்வேறு இடங்களில் கூட்டுறவு துறை உணவு வழங்கல் துறை சார்பாக ஆய்வு மேற்கொள்ள உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை புரிந்துள்ளார்.
கோவை: கோவை நியாய விலை கடையில் உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் பல்வேறு இடங்களில் கூட்டுறவு துறை உணவு வழங்கல் துறை சார்பாக ஆய்வு மேற்கொள்ள உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை புரிந்துள்ளார். பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் பீளமேடு பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து அங்குள்ள பயோமெட்ரிக் கருவி போன்றவைகளை பரிசோதனை செய்தார்.
மேலும் பொதுமக்களிடம் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் அங்குள்ள வசதிகள் போதுமானதாக உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
அவரிடம் பொதுமக்கள் சில குறைகளை தெரிவித்தனர்.
முக்கியமாக பயோமெட்ரிக் கருவி அடிக்கடி வேலை செய்வதில்லை என்றும் இதனால் வயதானவர்கள் உட்பட பலருக்கும் பொருட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என தெரிவித்தனர்.
அவர்களிடம் இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் முதியோர்களுக்கு பயோமெட்ரிக் கருவி சில நேரங்களில் வேலை செய்யவில்லை என்றால் குறிப்பேடு எதிலாவது கையெழுத்து வாங்கிவிட்டு பொருட்களை தருமாறு ஊழியர்களிடம் கூறினார்.
பின்னர் பொதுமக்கள் அவருக்கு பொன்னாடை அணிவிக்க வந்த போது பொன்னாடையை வாங்கி முதியவருக்கு அணிவித்தார். இந்த ஆய்வின் போது வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.