47-வது ஆண்டு மனித உரிமை இழப்பு நினைவு நாள்: இது ஒரு கொடூரமான நாள்-பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி..!

65-வயதை கடந்தவர்கள் மட்டுமே இந்த தினத்தின் உண்மை நிலையை புரிந்திருக்க முடியும், இந்திய அரசியல் சரித்திரத்தில் இது ஒரு கருப்பு நாள் எனவும், இந்த நாளை கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்று பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் சாடினார்.



கோவை: கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள, பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், இன்று 47-வது ஆண்டு மனித உரிமை இழப்பு நினைவு நாள், 47 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் எமர்ஜென்சி எனும் அவசர நிலையை இந்திய அரசியலமைப்புச் சட்டம், 352-பிரிவை பயன்படுத்தி அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பிறப்பித்து, அதன் மூலமாக இத்தனை ஆண்டுகள் நாம் கட்டி காத்த, பேச்சுரிமை, மனித உரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை இவையெல்லாம் அடித்து நொறுக்கி, அரசியலமைப்பு சட்டத்திற்கு விலக்கு அளிக்க பட்ட ஒரு கொடூரமான நாள் எனவும், தமிழக மக்களுக்கு புரியும் வகையில் கூற வேண்டுமென்றால் 65 வயதை கடந்தவர்கள் மட்டுமே இந்த தினத்தின் உண்மை நிலையை புரிந்திருக்க முடியும்.

அதனை அனுபவித்திருக்க முடியும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிவிப்பது என்றால், கொரோனா என்ற தொற்று பரவி மக்களை எப்படி அச்சுறுத்தியோ, அதே போன்று அரசியலில் நடைபெற்ற நாள் தான் இந்த கொடுங்கோல் நாள் தான் இந்த எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை என்று தெரிவித்தார்.

இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு கருப்பு நாள் எனவும், இந்த நாளை கொண்டு வந்தவர்கள் இந்த காங்கிரஸ் கட்சியினர் என்றும் சாடினார். அவர்கள் இன்று மிக சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் என்று கூறிய அவர், இன்று சுதந்திரம் பற்றி அவதூறாக பேசி அரசின் மீது குற்ற சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...