தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வானது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை: தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வானது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்குக்கான தேர்வு, கோவை மாவட்டத்தில் நான்கு மையங்களில் நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான -- சூலூர் ஆர்.வி்.எஸ் கல்லூரி, கோவில்பாளையம் எஸ்.என்.எஎஸ் கல்லூரி, மலுமிச்சம்பட்டி ஹிந்துஸ்தான் கல்லூரி மற்றும் கவுண்டம்பாளையம் கொங்குநாடு கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் இந்த தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் மொத்தம் 6,891 தேர்வு எழுதி வருகின்றனர். இதில், 1,195 பெண்கள் ஆவர். காலையில் ஆங்கில தேர்வும்,மதியம் தமிழ் எழுத்து தேர்வும் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், அடையாள அட்டை மற்றும் பேனாபோன்றவற்றை மட்டுமே கொண்டு வரவேண்டும் எனவும் அவற்றை தவிர மற்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.