கோவை பள்ளி வாசல் எதிரே பாரத் சேனா கொடிக் கம்பம் - பாரத் சேனா மாநில செயலாளர் கைது…!

வன்முறையை தூண்டும் வகையிலும், இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பாரத் சேனா மாநில செயலாளர் வாசு மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: கோவையில் பள்ளி வாசல் எதிரே பாரத் சேனா கொடி கம்பம் வைத்த, பாரத் சேனா மாநிலச் செயலாளரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் அருகே, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வழக்கமாக மாதம் ஒரு முறை கொடியேற்றி இறக்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று அங்கு ஏற்றப்பட்ட எஸ்.டி.பி.ஐகொடியை இறக்க கோரி பாரத் சேனா அமைப்பினர் ரகளை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த பள்ளி வாசல் அருகே பாரத் சேனா அமைப்பின் மாநில செயலாளர் வாசு தலைமையிலான நிர்வாகிகள், பாரத் சேனாகொடி கம்பத்தை வைத்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து வந்த ரத்தினபுரி போலீசார் இரண்டு கம்பங்களையும் அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலும், இரண்டு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பாரத் சேனா மாநில செயலாளர் வாசு மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...