பொதுக்குழுவில், ரஷ்யா - உக்ரைன் போல் அடித்துக் கொள்கின்றனர். இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள். இந்த கட்சி ஜாதி கட்சியாக மாறிவிட்டது.
கோவை: "எம்ஜிஆர்,ஜெயலலிதா வளர்த்த கட்சியை பொதுமக்கள், விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுக்குழுவில், ரஷ்யா - உக்ரைன் போல் அடித்துக் கொள்கின்றனர்.தீர்மானங்கள் எழுதி நீதிமன்றம் உத்தரவிட்ட பின் தூக்கி எறியப்பட்ட முதல் கூட்டம் இதுதான்", என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பெரும் பரபரப்பு மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் நேற்று, (வெள்ளிக்கிழமை) அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அங்கு பல்வேறுஅத்துமீறல்கள் நடைபெற்றதாக
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில்செய்தியாளர்கள் சந்திப்பின் போது பட்டியலிட்டுள்ளார்.
கோவை உடையாம்பாளையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், அதிமுக பொதுக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என காமெடி செய்து வருகிறார்,அதேபோல, எஸ்.பி வேலுமணியை நினைத்தாலும் தமாஷாக உள்ளது.
அந்த 23 தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது, மேலும், எந்த புதிய தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகிறது எனக் கூறினால், எதற்காக அதனை தயார் செய்ய வேண்டும், என்று கேள்வி எழுப்பினார்.
டிசம்பர் 1-ம் தேதி செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்,ஐந்து வருடம் வரை பொறுப்பில் நீட்டிக்கலாம் என்ற தீர்மானத்தை எம். ஜி.ஆர் கொண்டு வந்தார். அதனை, திருத்தப் போய் தான் தற்போது பெரும் சர்ச்சை நீடித்து வருவதாக, தெரிவித்தார்.
11 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்ததற்காக ஓபிஎஸ் ஐ
தாக்க முற்பட்டார்களா? அல்லது முதல்வர் பதவியிலிருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர், என அறிவித்ததற்காக அவரை அடிக்க வந்தார்களா ..? என்று கேள்வி எழுப்பினார்.
கே சி பழனிச்சாமி, புகழேந்தி, அன்வர் ராஜா, ஆகியோர் காண்பிக்கும் இடத்திலெல்லாம் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டவர், பன்னீர்செல்வம். ஒரு வருடத்திற்கு முன்பே, அனைத்தையும் விட்டுக் கொடுத்தால், உங்களுக்கு பின்னர் செக் வைப்பார்கள் என்று அவரிடம் (ஓபிஎஸ்) நான் கூறினேன். தற்பொழுது அதே போல நடந்து வருகிறது, என்று தெரிவித்தார்.
பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் வரும் போது, நீதிமன்ற உத்தரவை மீறி தற்போது செயல்பட வேண்டாம், அனைத்தையும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறும் பண்பாடு கூட கிடையாதா..?. பழனிச்சாமிக்கு தான் புத்தி இல்லை என்றால் வேலுமணிக்காவது இருந்திருக்க வேண்டும் தானே..?என்று சாடினார்.
பொதுக்குழு செல்லாது என சி.வி சண்முகம் கூறியதற்கு பதில் அளித்த அவர், அப்படி என்றால் நீவீர் (சி.வி சண்முகம்) எம்.பி யாக இருக்க முடியாது. பிறகு, நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். குழப்பத்தை உண்டாக்கி அனைவரின் பதிவியும் போவதற்கு சி.வி சண்முகம் காரணமாக உள்ளார், என்று குற்றம் சாட்டினார்.
பொதுக்குழுவில் எஸ் பி வேலுமணி, திமுகவிற்கு சவால் விடுகிறேன் என்று கூறியதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. காவல்துறையும், முதல்வரும் சிறிது ஏமாந்து இருந்தால் ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் பொதுக்குழுவில் இருந்து திரும்பி இருக்க முடியாது, என்று தெரிவித்தார்.
எம்ஜிஆர்,ஜெயலலிதா வளர்த்த கட்சி, பொதுமக்கள், விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுக்குழுவில், ரஷ்யா - உக்ரைன் போல் அடித்துக் கொள்கின்றனர்.தீர்மானங்கள் எழுதி நீதிமன்றம் உத்தரவிட்ட பின் தூக்கி எறியப்பட்ட முதல் கூட்டம் இதுதான்
இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள். இப்போது, இந்த கட்சி ஜாதி கட்சியாக மாறிவிட்டது, என்று விமர்சித்தார்.
பொதுக்குழுவில், முன்னால் மூன்று வரிசைகளில் ரவுடிகளை அமர வைத்து ரவுடித் தனம் செய்தனர். பொதுக்குழுவில் இதுபோன்ற செயல்களை தூண்டி விடுவதற்கு பழனிச்சாமி தான் காரணமாக இருக்க முடியும், எனவும் தெரிவித்தார்.
மேலும், 11-ம் தேதி பொதுக்குழு கூட்ட கூடாது என்று தெரிவித்த ஓபிஎஸ், குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக தான் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது என்றும் அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.