ஈஷாவில்‌ தியானலிங்க பிரதிஷ்டையின்‌ 23-வது ஆண்டு தினம்‌ மந்திர உச்சாடனங்கள் உடன் தொடங்கியது!

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கம் பிரதிஷ்டையின் 23 வது ஆண்டு தினம் மந்திர உச்சாடனங்கள் உடன் தொடங்கப்பட்டது.



கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கம் பிரதிஷ்டையின் 23 வது ஆண்டு தினம் மந்திர உச்சாடனங்கள் உடன் தொடங்கப்பட்டது

பல்வேறு மத மந்திரங்கள்‌, பாடல்கள்‌ அர்ப்பணிப்பு - கோவை ஈஷா யோகா மையத்தில்‌ உள்ள தியானலிங்கத்தில்‌ 23-வது ஆண்டு பிரதிஷ்டை தினம்‌ இன்று (ஜூன்‌ 24) அனுசரிக்கப்பட்டது. இதில்‌ கடந்த ஆண்டுகளைப்‌ போலவே இந்து, பெளத்த மதங்களின்‌ மந்திர உச்சாடனங்கள்‌ மற்றும்‌ கிறிஸ்துவ, சூஃபி பாடல்கள்‌ இசை வடிவில்‌ அர்ப்பணிக்கப்பட்டன.

தியானலிங்க கருவறையில்‌ காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின்‌ “அம்‌ நமசிவாய” மந்திர உச்சாடனையுடன்‌ பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது. இதைத்‌ தொடர்ந்து 'புத்த மத உச்சாடனைகளை சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா குழுவினர்‌ அர்ப்பணித்தனர்‌.

இதேபோல்‌, அமெரிக்க பழங்குடி மக்களின்‌ பாடல்கள்‌, தென்‌ ஆப்பிரிக்க மந்திர உச்சாடனை, சூஃபி சமய பாடல்கள்‌ போன்றவை இசை அர்ப்பணிப்புகளாக செய்யப்பட்டன. அத்துடன்‌ ஆதிசங்கரர்‌ இயற்றிய நிர்வாண ஷடாகம்‌', குரு பாதுக ஸ்தோத்ரம்‌ ஆகிய 2 சக்தி வாய்ந்த மந்திரங்களின்‌ உச்சாடனைகளும்‌ நடைபெற்றன. தேவார பாடல்கள்‌ பாடப்பட்டன.

இந்த உச்சாடனைகளில்‌ ஈஷா ஆசிரமத்தில்‌ வசிப்பவர்கள்‌ பங்கேற்றனர்‌. மாலை 6.10 மணிக்கு 'நாத ஆராதனை' எனும்‌ இசை அர்ப்பணிப்புடன்‌ மந்திர உச்சாடனை நிறைவு பெற்றது. ஒவ்வொரு வருடமும்‌ தியானலிங்க பிரதஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களைச்‌ சேர்ந்த மக்கள்‌ ஈஷாவுக்கு வந்து இந்நிகழ்வுகளில்‌ ஆர்வத்துடன்‌ பங்கேற்றதைப் போலவே இந்த வருடமும்‌ பல்லாயிரக்கணக்கான மக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

ஈஷாவில்‌ உள்ள தியானலிங்கமானது சுமார்‌ 3 ஆண்டுகள்‌ தவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால்‌ 1999-ம்‌ ஆண்டு ஜூன்‌ 24-ம்‌ தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7 சக்கரங்களும்‌ உச்ச நிலையில்‌ சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம்‌ எந்த ஒரு மதத்தையும்‌ சாராமல்‌, ஒரு மனிதர்‌ தனது உயிர்த்‌ தன்மையை உணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதரசத்தை கொண்டு ரச வைத்திய முறையில்‌ உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில்‌ இது தான்‌ உலகிலேயே மிகப்பெரிய லிங்கம்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...