பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரம் ராயல் சிட்டி பகுதியில் பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவந்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரம் ராயல் சிட்டி பகுதியில் பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவந்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரம் ராயல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. தனியார் கம்பெனியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் தியாகராஜன் (38). இவர் கடந்த ஜனவரி மாதம் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். கடந்த ஜூன் 16ம் தேதி ஜாமீனில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் முத்துச்சாமி தன்னை தனது மகன் தியாகராஜன் பணம் கேட்டு தினமும் தாக்கி துன்புறுத்துவதாக கோட்டூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து தியாகராஜனை அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.