ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் பணம் கொள்ளை!

திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து மத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து மத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அமர்சிங் (54). 



இவர் திருப்பூர் ஏ.பி.டி சாலை பகுதியில் குடியிருந்து வருகிறார். மேலும், இவர் திருப்பூரில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அமர்சிங் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை கேரளாவிற்கு சென்றுள்ளார்.



மீண்டும் இன்று மாலை திரும்பிய போது வீட்டின் கதவின் தாழ் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்களால், பீரோ கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...