11ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள பொன்மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவன் என்கிற மணிகண்டன் (29). இவர் ஓட்டுநராக உள்ளார்.

இவருக்கும் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி பள்ளி மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சஞ்சீவன் என்கிற மணிகண்டன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அவரது நண்பர்கள் சின்ராஜ் (30) மற்றும் பொன்ராஜ் (27) ஆகியோரின் தலைமையில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, மலுமிச்சம்பட்டி அருகே வைத்து சிறுமியை மீட்ட போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த மணிகண்டனின் நண்பர்கள் சின்ராஜ் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...