உலகளாவிய பொருளாதார நெருக்கடியால், கோவையில் அடுத்த ஆறு மாதங்களில் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் - தொழில்துறையினர் தகவல்

உலகளாவிய பொருளாதார நெருக்கடி துவங்கியுள்ளதால், அடுத்த ஆறு மாதங்கள் மிகவும் சவாலான காலகட்டமாக இருக்கும் என்றும் நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி தொழிலாளர்கள் சிலரை வேலையைவிட்டு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும், என கோவை தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.



கோவை: உலக அளவில் பொருளாதார நெருக்கடியால் (Global Recession) தொழில் நகரான கோவையில் அடுத்த 6 மாதங்களில் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது எனவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொழில் நகரான கோவை டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வெட் கிரைண்டர், காஸ்டிங், மோட்டார் பம்ப்செட் என்பது உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த பல்வேறு தொழில் துறையில் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் புகழ்பெற்று விளங்குகின்றது.

கோவையில் செயல்பட்டு வரும் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 10 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் முதல் அலை அதை தொடர்ந்து இரண்டாவது அலை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி திட்டம் சார்ந்த பிரச்சனைகள் என அடுத்தடுத்து பல்வேறு காரணங்களால் கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை குறைந்த போதும், தொழில் துறையில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடி துவங்கியுள்ளது, தொழில் துறையினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அடுத்த ஆறு மாதங்கள் மிகவும் சவாலான காலகட்டமாக இருக்கும் என்றும் நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி தொழிலாளர்கள் சிலரை வேலையைவிட்டு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும், என தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு..!

தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TANSPA) பொருளாளர், சாஸ்தா எம் ராஜா கூறியதாவது:



உலக அளவில் பொருளாதார நெருக்கடி துவங்கியுள்ளது. இதனுடைய தாக்கம் தொழில்துறையில் மிக அதிகம் இருக்கும். பொருட்கள் வாங்கும் திறன் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களில் பொருட்கள் உற்பத்தி செய்யும் பணிகள் படிப்படியாக குறைக்கப்படும். இவை எல்லாவற்றுக்கும் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் போதிய நிதி இல்லை. 

இது தவிர பெட்ரோல், டீசல் விலை அமல்படுத்துவதில் எண்ணெய் நிறுவனங்கள், தற்போது எதிர்கொண்டுள்ள நஷ்டம் காரணமாக எதிர்வரும் நாட்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தாக்கம் காரணமாக தொழில்துறையினர் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி தற்போது துவங்கியுள்ளது, இந்தியா மட்டுமின்றி அனைத்து உலக நாடுகளுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் இதன் தாக்கம் ஓரளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு நம் நாட்டின் சேமிப்பு கலாச்சாரமே முக்கிய காரணமாகும்.

எனினும் ஏற்கெனவே கொரோனா நோய்தொற்று காலத்தில் மக்கள் தங்களின் சேமிப்பு ஓரளவு செலவழித்து விட்டனர். தற்போது மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அதனுடைய தாக்கம் மிக அதிக அளவில் இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு.

தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIEMA)தலைவர், கார்த்திக் கூறியதாவது: 



கொரோனா நோய்த்தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக அளவில் பொருளாதார நிதி நெருக்கடி துவங்கியுள்ளது, மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக கொரோனா போன்ற நோய்தொற்று பரவிய முந்தைய காலங்களில் அந்த பாதிப்பைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி உலக அளவில் ஓராண்டுக்கு மேல் இருக்கும். இது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதனுடைய தாக்கம் மிக அதிக இருக்கும். 

கோவை மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் கொரோனா நோய் தொற்று பரவிய காலத்தில் கூட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்குறைப்பு செய்யப்படவில்லை. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் எதிர்கொள்ள உள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி, கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது. 

கோவையில் செயல்படும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக மிக கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டு ஆர்டர்கள் முற்றிலும் குறைந்தன..!

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின்(CODISSIA) தலைவர், ரமேஷ் பாபு கூறியதாவது:







உலக அளவில் பொருளாதார நெருக்கடி மீண்டும் துவங்கியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அடுத்த மாதம் முதல் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் துவங்கும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. 

கொரோனா நோய் தொற்று மற்றும் பல்வேறு இதர பிரச்சினைகள் காரணமாக கோவையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகப் பொருளாதார நெருக்கடி என்பது கோவை மாவட்ட தொழில் துறையில் மிகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளில் கோவை தொழில் நிறுவனங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த ஜாப் ஆர்டர்கள் தற்போது வழங்கப்படுவதில்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

கோவை தொழில் நிறுவனங்களில் இதுவரை ஆட்குறைப்பு என்பது இல்லாமல் இருந்தது. ஆனால், எதிர்வரும் நாட்களில் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் பல சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...