கோவை மாநகராட்சி சுகாதாரக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுகாதாரக்குழு கூட்டத்தில் ஆயுர்வேதிக், சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25 லட்சம் தொகை வழங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், கோவை மாநகராட்சியை தூய்மையாக மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

கோவையில் ஆயுர்வேத, சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25-லட்சம் தொகை வழங்க அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், கோவை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக வார்டு பகுதிகளில் கொரோனா பணிகள் மேற்கொள்ளும் மண்டல நல அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு வாகனங்கள் மாதாந்திர வாடகை அடிப்படையில் நியமனம் செய்வது 3-ஆயுர்வேதிக் மற்றும் 2-சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25-லட்சம் தொகையை வழங்க அனுமதி அளிப்பது கோவை மாநகராட்சியின் உள்ள 100-வார்டுகளிலும், தூய்மை பணியை விரைவுபடுத்துவது பொதுமக்களிடம் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு கிருமிகளால் ஏற்படும் நோய்களான மலேரியா டெங்கு போன்றவற்றை பரப்பும் கொசு புழுக்களை அழிக்க பேசில்லஸ் துரஞ்சியன்ஸ் அபேட்பைரத்திரம் மற்றும் மாலத்தியான் மருந்துகள் கொள்முதல் செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...