கோவை ரயில் நிலைய கழிவறையில் 17-வயது ஆந்திர சிறுமி மீட்பு: சைல்டு லைனில் ஒப்படைப்பு..!

ஆந்திராவில் இருந்து வேலை தேடி வந்ததாகவும், தனக்கு பெற்றோர் யாரும் இல்லை என்றும், இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்றும் சிறுமி தெரிவித்ததையடுத்து சைல்டு லைன் ஊழியர்கள் சிறுமியை மீட்டு, கோவை உக்கடம் டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை ரயில்வே நிலைய கழிவறையில் தங்கியிருந்த சிறுமியை மீட்ட போலீசார், சைல்டு லைன் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

கோவை ரயில்வே ஸ்டேஷன் கழிவறையில், 17 வயது சிறுமி ஒருவர் தங்கி இருப்பதை போலீசார் நேற்று பார்த்தனர். அவரிடம் விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து வேலை தேடி வந்ததாகவும், கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், தன்னை அழைத்து வந்த நபர், தனியாக விட்டுச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

தனக்கு பெற்றோர் யாரும் இல்லை என்றும், இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியை பற்றிய விவரம், சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த சைல்டு லைன் ஊழியர்கள் சிறுமியை மீட்டு, கோவை உக்கடம் டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...