ரேஸ்கோர்ஸ் சாலையில் ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு - மாநகராட்சி ஆணையாளர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மிதிவண்டி பாதைக்கு கீழே மழைநீர் வடிகால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிக்கும் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாதை மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபாதை தளம், பூங்காக்கள், மிதிவண்டி தளம், வண்ணமிகு விளக்குகள் போன்ற வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மிதிவண்டி பாதைக்கு கீழே மழைநீர் வடிகால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிக்கும் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.



ரேஸ்கோர்ஸ் சாலையில் மழைநீர் அதிகம் வழிந்தோடும் பகுதியில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஜெர்மன் தொழில் நுட்பம் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதியில், சேகரமாகும் மழைநீர் இத்த வடிகால் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து, பின்னர் அதற்காக அமைக்கப்படும் சுத்திகரிப்பு தொட்டிக்கு சென்று சுத்தமாகி நிலத்திற்குள் மீண்டும் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.



மழைநீர் சேமிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் சாலையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஜெர்மன் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டு வருகிறது, என்று மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...