தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் முகமது முத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு!

திருப்பூரைச் சேர்ந்த தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் முகமது முத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அமித்ஷாவை சந்தித்து ஆதரவு கோர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் முகமது முத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அமித்ஷாவை சந்தித்து ஆதரவு கோர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் முகமது முத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பெருமாநல்லூரைச் சேர்ந்த முகமது முத்து தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக உள்ளார்.



இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முகமது முத்து தான் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வேட்புமனு வாங்கி வந்துள்ளேன். வரும் 27ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.

தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஆதரவு கேட்டுள்ளேன். அதே போன்று ஆந்திர முதல்வரிடமும் ஆதரவு கேட்டுள்ளேன். அதுமட்டுமின்றி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆதரவு கேட்க உள்ளேன். நான் வெற்றி பெறும் பட்சத்தில் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவேன். கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தமிழகத்தின் பெருமையை நிலை நிறுத்துவேன் என்றார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...