பல்லடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்ட தடை விதித்த வருவாய்த் துறையினரை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்!

பல்லடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு தடை விதித்து நோட்டீஸ் வழங்கிய வருவாய்த் துறையினரை கண்டித்து, நிலத்தை அளவீடு செய்து தரவில்லை என்று கூறி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜம்மாள் என்பவர் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


திருப்பூர்: பல்லடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு தடை விதித்து நோட்டீஸ் வழங்கிய வருவாய்த் துறையினரை கண்டித்து, நிலத்தை அளவீடு செய்து தரவில்லை என்று கூறி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜம்மாள் என்பவர் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேகாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து. அவரது மனைவி ராஜம்மாள். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு நல்லமுத்து உயிரிழந்த நிலையில் ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 2000-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சேகாம்பாளையத்தில் தாங்கள் வசித்து வந்த 2 சென்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்று வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்து வந்த வீடு மழையால் சிதிலமடைந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். அதற்கு அருகில் வசிப்பவர்கள் வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக வருவாய் துறையினருக்கு புகார் அளித்த நிலையில் வீடு கட்டும் பணிக்கு தடை வழங்கி நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜம்மாளின் மகன் சக்திவேல் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், தனது இடத்தை அளவீடு செய்து தருமாறு மனு அளித்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஆட்சியர் அலுவலகம், அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.



இதனால் ஆத்திரமடைந்த ராஜம்மாள் தனது மகன் சக்திவேல் குடும்பத்தினருடன் வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.



வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருவதாகவும், உடனடியாக தங்கள் இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...