கோவையில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா பரவல்..! அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 100 படுக்கைகள்...!

கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 500 க்கும் மேற்பட்ட நபர்களின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்று கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.


கோவை: கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் மீண்டும் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து தெரிவித்த கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 500 க்கும் மேற்பட்ட நபர்களின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.

மேலும், கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசின் அறிவுறுத்தல் படி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தனி நபர் இடைவெளி விட்டு நிற்பதுடன், முக கவசம் (மாஸ்க்) கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த நாளை, ஜூன் 24 ஆம் தேதி முதல் அனைத்து அலுவலர்களும் கட்டாயமாக முக்ககவசம் (Face Mask) அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் (Respiratory hygiene and use of hand sanitizers in the Office premises) இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...