கோவையில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்..!

இதில், ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி கோவை ரயில் நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்திலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



முற்றுகைப் போராட்டத்திற்கு முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயலும் போது காவல்துறையினர் தடுத்ததால் அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இக்கட்சியின் கலை இலக்கிய மாநில பொறுப்பாளர் களப்பிரார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



இதனால் ரயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...