கோவையில் ‘ஹூலா ஹூப்’ சாகசத்தில் அசத்தும் நான்கு வயது சிறுமி..!

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒரு நிமிடத்தில் ஹூலா ஹூப் எனும் சாகச வளையத்தை 160-முறை கால் பாதத்தில் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.


கோவை: கோவையில் நான்கு வயது சிறுமி ‘ஹூலா ஹூப்’ எனும் சாகச வளையத்தை கால் பாதத்தில் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், லட்சுமி பிரியா தம்பதியரின் மகள் யாழினி. நான்கு வயதான இவர் எல்.கே.ஜி படித்து வருகிறார். தனது இரண்டு வயதிலேயே ஹூலா ஹூப் எனும் சாகச வளையம் சுற்றுவதில் தனி பயிற்சி பெற்ற இவர், தொடர்ந்து தனது கைகள், இடுப்பு, கழுத்து ஆகிய உடல் பகுதிகளில் சாகச வளையத்தை சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.



இவரது அரிய திறமையை கண்ட இவரது பெற்றோர், இவருக்கு அளித்த பயிற்சியின் காரணமாக தற்போது கால் பாதங்களில் சாகச வளையத்தை ஒரு நிமிடத்தில் 160 முறை வேகமாக சுற்றி சாதனை படைத்துள்ளார்.

சென்னை ஹூப்பர்ஸ் உடன் இணைந்து நடந்த சாதனை நிகழ்ச்சி சூலூர் பகுதியில் உள்ள கிராமிய புதல்வன் அகாடமி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுமி தனது கால்களில் சாகச வளையத்தை அசத்தலாக சுத்தினார்.



இவரது இந்த சாதனையை பீனிக்ஸ் சாதனை புத்தகத்தின் கலை இலக்கிய பிரிவு இயக்குனர் அசாருதீன் கண்காணித்து, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். தொடர்ந்து சிறுமி யாழினியை அனைவரும் பாராட்டினர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...