கிராமப்புற மகளிருக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில், 29-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி திமுக மாவட்ட அலுவலகத்தில், கிராமப்புற பெண்கள் மேம்பாடு அடைய வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்தார். தலைமைபொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி,நகர இளைஞரணி அமைப்பாளர் திருமலை ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பேசுகையில்,கிராமப்புற பகுதிகளில் மகளிருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த, 5000-மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் எலக்ட்ரானிக்உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும்தொழிற்சாலைக்கு தமிழக முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதற்கு பொள்ளாச்சி மக்கள் சார்பில் தமிழக முதலமைச்சருக்குநன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், 5000-மகளிர் தேர்ந்தெடுக்கும் பணிக்கு பொள்ளாச்சி உடுமலை பகுதியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக, பொள்ளாச்சியில் வருகின்ற 29-ம் தேதிபுதன்கிழமை தனியார் கல்லூரியில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.