கோவையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா 2022 வின் லோகோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

கோவை புத்தகத் திருவிழாவின் 8வது பதிப்பு ஜூலை 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையினையை (logo), கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் இன்று வெளியிட்டார்.


கோவை: கோவை புத்தகத் திருவிழாவின் 8வது பதிப்பு ஜூலை 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையினையை (logo), கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் இன்று வெளியிட்டார்.

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களை கொண்டு ஒரே இடத்தில் திருக்குறளை வாசிக்கும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த புத்தக கண்காட்சியை அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து வந்து காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும், ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த லோகோ உருவாக்குவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் இருந்து 484 வடிவமைப்பு வரப்பெற்ற நிலையில், தனியார் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணியாற்றும் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த சில்வஸ்டர் வடிவமைத்த லோகோ தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர், பிரதாப், கொடிசியா தலைவர் சுரேஷ் பாபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...