கோவை ஆனைகட்டி பகுதியில் மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை - 12 பேரை மடக்கி பிடித்த வனத்துறை

இரு வேறு சம்பவங்களில், புள்ளிமானை வெட்டிக் கூறு போட்டு சமைத்த குற்றத்திற்காக 12 பேரிடம் தலா ரூ.25 ஆயிரம் என ரூ.2.75 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கடந்த 18 ஆம் தேதி கோவை வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைகட்டி அடுத்த துவைப்பதி பழங்குடி கிராமத்தில், மான் கறி விற்பனை செய்யப்படுவதாக கோவை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சமைத்த நிலையில், புள்ளி மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. மேலும், வீட்டினுள் சென்று ஆய்வு செய்த போது புள்ளிமான் இறைச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஆனைகட்டியை சேர்ந்த முருகன் (49), என்பவரிடம் மான் கறியை வாங்கி துரைசாமி (65) என்பவருக்கு இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.பின்னர், துவைப்பதியை சேர்ந்த முருகன் (55) மற்றும் துரைசாமி இருவரும் இணைந்து ஆனைகட்டி சேர்ந்த கருப்பராயன் (39), ஜெயக்குமார் (31), ஜெகநாதன் (39) ஆகிய மூவருக்கும் மான் கறியை விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து, முருகனை வனத்துறையினர் அருகில் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த புள்ளிமானின் தலை மற்றும் கொம்பு மற்றும் அதைப்பிடிக்க பயன்படுத்திய சுருக்குவலை, வெட்ட பயன்படுத்திய கொடுவாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர், இதில் தொடர்புடைய 6 பேரையும் மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் புள்ளி மானை வேட்டையாடிய முருகனுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் மான் இறைச்சியை விலைக்கு வாங்கி சமைத்த 5 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1.25 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று மாலை 7 மணியளவில் ஆனைகட்டி பகுதிக்கு உட்பட்ட மூங்கில் பள்ளம் அருகே மான் கறி மான் இறைச்சி வீட்டில் வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் படி வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூங்கில் பள்ளம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (65) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கங்கா கால்வாய் அருகே உள்ள காப்பு காட்டிற்கு வெளியே உள்ள ஓடை அருகே தான் வளர்த்த நாயை விட்டு, மானை கடிக்க வைத்து புள்ளிமானை வேட்டையாடிது தெரியவந்தது.



பின்னர், இறந்த மானை வெட்டி தனது வீட்டின் அருகே உள்ள பாபு (40), சுப்பிரமணி (45), ராமு (30), சிவதாஸ் (37), மற்றும் கந்தசாமி என்பவருக்கும் புள்ளி மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மானை வெட்டிய இடத்திற்கு ரங்கசாமியை அழைத்துச் சென்ற வனத்துறையினர், அங்கிருந்து மானின் கொம்பு, தலை மற்றும் தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, புள்ளிமானை வெட்டிக் கூறு போட்டு சமைத்த குற்றத்திற்காக 6 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என ரூ.1.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...