ஆக்கிரமிப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 500-கோடி ரூபாய் மதிப்புள்ள 200-க்கும் மேற்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தக்க நடவடிக்கை வேண்டி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் S.P.தியாகராஜன் சமூக செயற்பாட்டாளர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
1) The Tamil Nadu Parks, Play Fields and Open Spaces (Preservation and Regulation) Act (26 of 1959).
2) Municipal Administration & Water Supply G.o.MS.No: 222 dt 28-08-1992.
3) சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நாள்: 19-02-2004.
4) சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு தாள்: 03-01-2007.
5) கோவை மாநகராட்சி ஆணையர் உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கு எண் : WA 45/2003 தீர்ப்பு நாள்: 12-04-2007.
6) கோவை மாநகராட்சி ஆணையர் அவர்களின் 12-09-2007 தேதிய உத்தரவு.
7) Municipal Administration & Water Supply Department. Deputy Secretary Letter Dt: 13-11-2007.
8) உச்ச நீதிமன்ற வழக்கு எண்: CC 10751 - 10752/2007 தீர்ப்பு நாள்: 15-01-08.
9) Commissioner of Town and Country planning Letter dt: 29 -1-08.
10) நகராட்சி நிர்வாக ஆணையர் கடிதம் நாள்: 22-4-08.
11) கோவை மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை நாள்: 09-05-2008.
12) சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நாள்: 23-11-10.
13) நகராட்சி நிர்வாக ஆணையரகம் சுற்றறிக்கை நாள்: 20-07-2011.
14) சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நாள்: 13 -11- 2013.
நகர ஊரமைப்புத்துறையால் ஒப்புதல் அளித்துள்ள மனைப்பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள பொது ஒதுக்கீட்டு (ரிசர்வ் சைட்) இடங்கள் கோவை மாநகராட்சி இணையதளத்தில் (Reserve Site Details) 5 மண்டலங்குட்பட்ட 100 வார்டுகளில் சுமார் 1450-எண்ணிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
மேற்படி குறிப்பிட்டுள்ள ரிசர்வ் சைட் விவரங்களில் 150 க்கும் மேற்பட்ட சுமார் 25 ஏக்கர் விஸ்தீரணமுள்ள 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ரிசர்வ் சைட் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என ஆக்கிரமிப்பாளர்களின் புள்ளி விவரங்களை மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும், கோவை மாநகராட்சி இணையத்தில் குறிப்பிடப்படாத சுமார் 100-க்கும் மேற்பட்ட ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு இடங்கள் எங்களால் கண்டறிப்பட்டுள்ளது.
ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிலுவையில் உள்ளதில் (தடை உத்தரவு வழங்கியுள்ளதை) தவிர்த்து மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களின் வசமுள்ள இடங்களுக்கு ஒரு சில ஆக்கிரமிப்பாளர்களை தவிர மீதமுள்ளவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக மாநகராட்சி சட்டம் 1981 ன் படி அறிவிப்பு ஏதும் நாளது தேதி வரை நகரமைப்பு பிரிவு அதிகாரிகளால் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் மேற்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரிசர்வ் சைட் இடங்களை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த வருகிறோம். மேலும் ஆக்கிரமிப்பாளர்களால் மேற்படி ரிசர்வ் சைட் இடங்களை கிரையம் செய்து பல நபர்களுக்கு கைமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். சிலர் கட்டிடம் கட்டி உள்வாடகை விட்டு வருமானம் பார்த்து வருகின்றனர். சிலர் காலி இடங்களை குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர். இவர்களுக்கு கோவை மாநகராட்சி வருவாய் பிரிவில் வரி விதிப்பும், நகரமைப்பிரிவில் கட்டிடம் கட்டுவதற்கு கட்டிட அணுமதியும் வழங்கியுள்ளனர்.
ஆகவே தாங்கள் மேற்காண் பார்வை 1 முதல் 14 வரை கண்டுள்ள உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படியும், அரசு உத்தரவுகளின் படியும் கோவை மாநகராட்சி இணையத்தில் 100 வார்டுகளில் ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு பட்டியில் கண்டுள்ள மற்றும் இணையத்தில் குறிப்பிடாமல் உள்ள DTCP-மனைப்பிரிவுகள், வரன்முறை செய்யப்பட்ட மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்பு, தொகுப்பு வீடுகள் (Group House) வணிக வளாகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 250 (2) ன் படி 10% கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் இடங்களை முறைகேடாக போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்துள்ள பத்திரங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்து மேற்படி ரிசர்வ் சைட் இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பொது மக்கள் மற்றும் மழலையர்கள் பயன்படுத்துவதற்கும். சுற்றுசூழலை பாதுகாப்பதற்கும். தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு தங்களை அனைத்து குடியிருப்பு பொதுமக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளரிடம் S.P.தியாகராஜன் சமூக செயற்பாட்டாளர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளார்.
மாநகராட்சிக்கு சொந்தமான 250-ஆக்கிரமிப்பு ரிசர்வ் சைட் இடங்களின் பட்டியலை 10-க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன், சந்தோஷ் மாமன்ற உறுப்பினர் மற்றும் நகரமைப்பு குழு தலைவர் உள்ளிட்டோர் வழங்கினர். ஆக்கிரமிப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.