கோவையில் அதிவேகமாக வந்த கார் மோதி சாலை ஓரத்தில் இரு சக்கர வாகனத்தில் நின்ற இளைஞர் பலி..!

அதிவேகமாக வந்த கார் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.


கோவை: கோவையில் அதிவேகமாக வந்த கார் மோதி சாலை ஓரத்தில் இரு சக்கர வாகனத்தில் நின்ற இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சபரிநாதன் (21). ஐடிஐ படித்த சபரிநாதன் பிளிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார்.



இந்நிலையில், ஆலந்துறை பகுதியில் உள்ள"பாலசுப்பிரமணியம் கடை" அருகே வாடிக்கையாளர் ஒருவருக்கு வந்த பார்சலை டெலிவரி செய்ய சபரிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கோவையில் இருந்து சிறுவாணி நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று, சாலையோரம் இருந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்த சபரிநாதன் மீது மோதியது.



இதில், சபரிநாதன் தூக்கி எறியப்பட்ட இதன் காரணமாக தலை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சபரிநாதனை பரிசோதித்தமருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

மேலும், சாமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், சபரிநாதன் தந்தை மணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை அதி வேகமாக ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை பிடித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அதிவேகமாக வந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...