பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை: பண நெருக்கடியால், கோவையில் 10 நாட்களில் 50 கோடி ரூபாய் பழைய தங்க நகைகளை விற்ற மக்கள்..!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக, பெற்றோர் தாங்கள் சேமித்து வைத்த தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய தங்க நகை விற்பனை நடைபெற்றுள்ளது.


கோவை: கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பள்ளி, கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக, கோவையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, தங்க நகை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முத்து வெங்கட்ராம் கூறியதாவது:



ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் அந்த பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், கொரொனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.

இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக, பெற்றோர் தாங்கள் சேமித்து வைத்த தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய தங்க நகை விற்பனை நடைபெற்றுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், எதிர்வரும் நாட்களிலும் கூடுதலாக பழைய தங்க நகைகள் விற்பனை செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

கைகொடுக்கும் தங்க நகை சேமிப்பு..!

கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மந்தமான பொருளாதார சூழல் என பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், பொதுமக்கள் முந்தைய காலங்களில் தங்கள் சேமிப்பு பணத்தை வைத்து தங்க நகைகளை வாங்குவதற்கு முதலீடு செய்த காரணத்தால், இன்று அவர்களுக்கு அந்த தங்க நகைகள் தற்போதுள்ள நெருக்கடியான நிதி நிலையை எதிர்கொள்ள பெரிதும் உதவி வருதிறது

எனவே, தங்கத்தில் முதலீடு செய்தால் எதிர்வரும் காலங்களிலும் பெரிய அளவு நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்பதற்கு இன்றைய சூழ்நிலையே சிறந்த சான்றாகும்.

இவ்வாறு தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முத்து வெங்கட்ராம் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...