பொள்ளாச்சி அருகே தனியார் மில்லில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: 6 மாதத்திற்கு பிறகு சூப்பர்வைசர் கைது!

கோவையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தனியார் மில்லில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சூப்பர்வைசரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தனியார் மில்லில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சூப்பர்வைசரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தவர் சாந்து முகமது (28). இவர் பணியாற்றி வந்த மில்லில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது சிறுவன் உணவருந்த மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவரது பெற்றோர்கள் சிறுவனை கண்டிக்கும்படி சாந்து முகமதுவிடம் கூறியதாக தெரிகிறது.

அப்போது சிறுவனை மிரட்டிய சாந்து முகமது அவரது முதுகில் அடித்த போது சிறுவன் கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், சிறுவன் தாக்கப்பட்டு கீழே விழுந்ததால் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, சிறுவன் உயிரிழப்புக்கு காரணமான சாந்து முகமது மீது 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...