அதிமுகவில் நடைபெறும் பிரச்சனைகள் உள் கட்சி சார்ந்த பிரச்சனைகள் என தெரிவித்த அவர், இதில் பாரதிய ஜனதா கட்சி கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை என தெரிவித்தார்.
கோவை: கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில்சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு யோகாசன பயிற்சியை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் யோகக் கலைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெரிய அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளார் என தெரிவித்தார். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவதாகவும், கோவை மாநகர் மாவட்டத்தில் மட்டும் 300 இடங்களில் இந்த நிகழ்வு நடைபெறுவதாகக் கூறினார்.
யோகா உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் சேர்ந்த பயிற்சி எனவும், கொரோனா காலத்தில் மூச்சுப்பயிற்சி போன்ற பயிற்சிகள் உடல் நலத்தை பேணுவதில் எப்படி பலன் கொடுக்கிறது என்பதை உலகம் பார்த்தது எனவும் பிரதமர் மைசூரில் யோகா தினத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இரண்டு வருடமாக ஊரடங்கால் சிறப்பிக்க முடியவில்லை என தெரிவித்தார். மேலும், அதிமுகவில் நடைபெறும் பிரச்சனைகள் உள் கட்சி சார்ந்த பிரச்சனைகள் என தெரிவித்த அவர் இதில் பாரதிய ஜனதா கட்சி கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை என தெரிவித்தார்.