சர்வதேச யோகா தினம்: அரசியலில் இருப்பதால் மன அழுத்தம் கூடுதலாக இருக்கும். அதை சரி செய்ய யோகா உதவியாக உள்ளது - வானதி சீனிவாசன்

கோவையில் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா தினத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டார்.



கோவை: இன்று ஜூன் 21, உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாட்டில் பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் யோகா பயிற்சிகள் கற்பிப்பு மற்றும் யோகா செய்வதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.



கோவையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, பீளமேடு பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற யோகா தினத்தில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டார்.



இந்நிகழ்வில் பேசிய அவர், யோகா பயிற்சி மிகப்பெரிய கலை.நோய்தொற்று காலத்தில் யோகா பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. யோகா பயிற்சியினால் மன அமைதியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும்.

மேலும் நாங்கள் அரசியலில் இருப்பதால் எங்களுக்கு ஸ்ட்ரெஸ் கூடுதலாக இருக்கும். எனவே, நாங்களும் யோகா பயிற்சி எடுத்து வருகிறோம். மேலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர்கள் இந்த யோகா பயிற்சியை செய்து வருகிறார்கள், என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கல்லூரியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...