மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து தமிழக அரசு செயல்படுத்துகிறது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!

மத்திய அரசின் ஒவ்வொரு நல்ல திட்டங்களையும் காப்பியடித்து தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற பா.ஜ.க மாவட்ட மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: மத்திய அரசின் ஒவ்வொரு நல்ல திட்டங்களையும் காப்பியடித்து தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற பா.ஜ.க மாவட்ட மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

பாரதீய ஜனதா ஆட்சியின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது.



இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், திமுக ஆட்சியில் இருந்தபோது 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பித்து இருக்க வேண்டும், கர்நாடக அரசு 5 அணைகளை கட்ட அனுமதித்து இருக்கக் கூடாது. அணைகளை கட்ட அனுமதி அளித்துவிட்டு போராடுவதை போல நாடகமாடி இத்தனை ஆண்டுகள் கடிவாளம் போட்ட விஷயத்தை 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகுதான் விவசாயிகள் நம்பிக்கையுடன் பயிர் செய்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் கச்சத்தீவை பற்றி பேசாமல் பாரதிய ஜனதா கட்சி தற்போது கச்சத்தீவை மீட்க போகிறது என்று தெரிந்த பிறகு இன்று ஒப்புக்குச் சப்பாக கச்சத்தீவை பற்றி தமிழக முதல்வர் பேசுவதாக குற்றம் சாட்டினார். அக்னிபாத் திட்டம் என்பது, ராணுவத்தில் பணியாற்றிவிட்டு மக்கள் சேவை செய்ய இளைஞர்களை வர வைப்பது தான். நல்லவர்கள் வந்தால் அரசியல் செய்ய முடியாது என்று தான் இத்திட்டத்தை எதிர்க்கின்றார்கள். பிரதமர் கொண்டு வந்துள்ள இத்திட்டம் முப்படைகளை தலைகீழாக மாற்றுகின்ற திட்டம். தைரியமாக இந்தியா எதையும் எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் ஒவ்வொரு நல்ல திட்டங்களையும் காப்பியடித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மாணவர்கள் மருத்துவர் கனவை நனவாக்கி உள்ளது. எந்த மாநிலத்திலும் நீட்டை எதிர்க்கவில்லை. தமிழகத்தில் மட்டும் தான் நீட் தேர்வுக்கு எதிராக போராடுகிறார்கள். அதற்கு திமுக கூட்டணிக் கட்சிகளும் துணை போகிறது. காவல்துறை திமுக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். தமிழகத்தில் இத்தனை ஆண்டு காலம் இல்லாத வகையில் கூட்டு பலாத்காரம் அதிகளவு நடைபெறுகிறது.

திமுக ஆட்சியில் தண்ணீர் தேக்குவதற்காக ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. வீணாகும் தண்ணீரை பாதுகாக்க தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...