கோவையில் போலி நகைகள் மூலம் ரூ.1.3 கோடி மோசடி - வங்கி அதிகாரிகள் கைது!

கோவையில் 3 கிலோ போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் 3 கிலோ போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சேரன் மாநகரில் உள்ள இந்தியன் வங்கியில் பிரேம்குமார் என்பவர் மேலாளராகவும், உஷா என்பவர் உதவி மேலாளராகவும் பணியாற்றி வந்தனர். கடந்த ஆண்டு தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகைகளை அடகு வைத்து மோசடி செய்து இடைத்தரகர் மூலம், பணத்தை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஒரே பெயரில் நகைகள் வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது, போலி நகைகளை வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் 3 கிலோ போலி தங்கத்தை வைத்து ரூ.1.3 கோடி பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் வங்கி மேலாளர் பிரேம்குமார், உதவி மேலாளர் உஷா, நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட 12 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் போலி நகைகளை வைத்து பணம் பெற்றதும், ரெஜி என்ற புரோக்கர் இந்த மோசடியில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து மேலாளர் பிரேம்குமார் மற்றும் உதவி மேலாளர் உஷா கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...