கோவை மத்திய சிறையில் 12-மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் 100-சதவீதம் தேர்ச்சி..!

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 20-கைதிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 33-கைதிகளும் தேர்வு எழுதிய நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய சிறை கைதிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மத்திய சிறையில் இருந்து 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 20-கைதிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 33-கைதிகளும் எழுதினர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகர், பொள்ளாச்சி, எஸ் எஸ் குளம், பேரூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 524 பள்ளிகளைச் சேர்ந்த 19 ஆயிரத்து 827 மாணவர்கள் 19 ஆயிரத்து 804 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 636 பேர் எழுதினர்.

இதில், 17 ஆயிரத்து 584 மாணவர்களும் 19 ஆயிரத்து 27 மாணவிகளும் என மொத்தம் 36 ஆயிரத்து 661 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.69 மாணவிகள் தேர்ச்சி வீதம் 92.38 மொத்தமாக மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 92.38. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் கோவை மாவட்டம் 14-வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவில் கோவை மாவட்டம் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...