பூர்வீக சொத்தை அபகரிக்க முயலும் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
திருப்பூர்: பூர்விக சொத்தை அபகரிக்க முயலும் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் தனது கணவர் மனோஜ் மற்றும் மகன் மனோஜ், மகள் சௌரபி மற்றும் தாய் சுந்தரம்பாளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு வந்த பத்மாவதி தான் பையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், தனது தாய் மற்றும் குழந்தைகள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஊஞ்சப்பாளையத்தில் தனது குடும்ப சொத்தாக உள்ள 5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் எங்களது உறவினர் சூலூர் பாப்பம்பட்டியை சேர்ந்த நடராஜ் முயற்சி செய்து வருகிறார்.
மேலும், கடந்த 10-ம் தேதி எங்கள் நிலத்திற்கு அடி ஆட்களுடன் வந்து எங்களை மிரட்டியது மட்டுமின்றி, அநாகரிகமாகவும் நடந்து கொண்டார். இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எங்களை மிரட்டி, எங்களது பூர்வீக சொத்தை அபகரிக்க முயலும் நடராஜ் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் சொத்தை மீட்டு தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.