காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ புதுக்கோட்டையில்‌ சமவெளியில்‌ மிளகு சாகுபடி களப்‌ பயிற்சி - 900 விவசாயிகள்‌ பங்கேற்பு!

புதுக்கோட்டையில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் களப் பயிற்சி நடந்ததில் 900 விவசாயிகள் பங்கேற்றனர்.


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் களப் பயிற்சி நடந்ததில் 900 விவசாயிகள் பங்கேற்றனர்.

காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌' சமவெளியிலும்‌ மிளகு சாகுபடி சாத்தியமே‌ என்ற தலைப்பில்‌ களப்‌ பயிற்சியும்‌, விவசாய கருத்தரங்கும்‌ புதுக்கோட்டையில்‌ இன்று (ஜூன்‌ 19) நடைபெற்றது. இதில்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ இருந்து சுமார்‌ 900 விவசாயிகள்‌ பங்கேற்றனர்‌.

இது தொடர்பாக, இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ மாநில கள ஒருங்கிணைப்பாளர்‌ தமிழ்மாறன்‌ கூறுகையில்‌, “பொதுவாக மிளகு சாகுபடி மலை பகுதிகளில்‌ மட்டும்‌ செய்ய முடியும்‌ என விவசாயிகள்‌ எண்ணி கொண்டுள்ளனர்‌. ஆனால்‌, புதுக்கோட்டை பகுதியைச்‌ சேர்ந்த பல விவசாயிகள்‌ பல வருடங்களாக சமவெளியிலேயே மிளகு சாகுபடி செய்து வருகின்றனர்‌. அத்துடன்‌, டிம்பர்‌ மரங்களில்‌ மிளகு கொடியை ஏற்றி கூடுதல்‌ வருவாயும்‌ ஈட்டி வருகின்றனர்‌.



எனவே, இந்த வாய்ப்பை பிற மாவட்ட விவசாயிகளுக்கும்‌ கொண்டு சேர்க்கும்‌ வகையில்‌ நாங்கள்‌ இப்பயிற்சியை கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறோம்‌. இதுவரை 5,000 க்கும்‌ மேற்பட்ட விவசாயிகள்‌ இப்பயிற்சியால்‌ பயன்பெற்றுள்ளனர்‌. அவ்விவசாயிகள்‌ தமிழகம்‌ முழுவதும்‌ மிளகு சாகுபடியை தொடங்கியுள்ளதால்‌ தமிழகம்‌ முழுவதும்‌ மிளகு சாகுபடி நடந்து வருகிறது. விவசாயிகள்‌ தங்களது வழக்கமான பயிர்களுடன்‌ வேலியோரங்களில்‌ உள்ள மரங்களில்‌ மிளகு படர விடலாம்‌. மரப்பயிர்‌ சாகுபடி செய்துள்ள விவசாயிகள்‌ மிளகு சாகுபடி‌ செய்வதன்‌ மூலம்‌ வருடா வருடம்‌ வருமானம்‌ பெற இயலும்‌. மிளகு நட்டு 3 முதல்‌ 4 ஆண்டுகளில்‌ மிளகு காய்க்கத்‌ துவங்கும்‌. 10 ஆண்டு வளர்ந்த ஒரு மிளகு கொடியில்‌ இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய முடியும்‌” என்றார்‌.

ஆலங்குடி தாலுகா, வடகாடு கிராமத்தில்‌ உள்ள முன்னோடி விவசாயி பாக்யராஜ்‌ மிளகு தோட்டத்தில்‌ இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதில்‌ வெற்றிகரமாக மிளகு சாகுபடி‌ செய்து லாபம்‌ ஈட்டி வரும்‌ முன்னோடி விவசாயிகளான, பாலுசாமி, ராஜாகண்ணு, பாக்யராஜ்‌, செந்தமிழ்‌ செல்வன்‌, திருமலை மிளகு சாகுபடியின்‌ நுணுக்கங்களையும்‌ தங்கள்‌ அனுபவங்களையும்‌ பகிர்ந்து கொண்டனர்‌.

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர்‌ ராம. சிவக்குமார்‌, கூடுதல்‌ இயக்குனர்‌ செந்தில்‌ குமார்‌, காவேரி கூக்குரல்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ ஸ்வாமி ஸ்ரீமுகா ஆகியோரும்‌ விவசாயிகளுக்கு ஆலோசனைகள்‌ வழங்கினர்‌.



இந்திய விவசாய சங்கத்‌ தலைவர்‌ தனபதி, காவல்துறை துணை கண்காணிப்பாளர்‌ ஸ்ரீபரத்‌ சீனிவாசன்‌, விவசாயி மரம்‌ கண்ணன்‌ ஆகியோர்‌ குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...