இயற்கையாகக் கிடைக்கும் காற்றைப் பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழக மக்களின் தேவை போக, மீதம் உள்ள மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் ஈட்டி வரும் தமிழக அரசின் முயற்சிக்கு காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை: இயற்கையாகக் கிடைக்கும் காற்றைப் பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழக மக்களின் தேவை போக, மீதம் உள்ள மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் ஈட்டி வரும் தமிழக அரசின் முயற்சிக்கு காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே மார்ச் 15ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் துவங்கியுள்ளது. காற்று சீசன் துவங்கியுள்ள காரணத்தால் தினமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதிக அளவில் மின் உற்பத்தி செய்யப்படும் காரணத்தால், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை தமிழக மக்களின் பயன்பாட்டுக்கு போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கைக்கு காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
காற்று சீசன் துவங்கியுள்ள காரணத்தால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின் தேவையில் 30% காற்றாலைகள் பங்களிப்பு செய்து வருகின்றன. ஒரு சில நாட்கள் இந்த பங்களிப்பு சதவீதம் மாறும். எதிர்வரும் மூன்று மாதங்களில் காற்று அதிகம் இருக்கும் என்ற காரணத்தால் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும்.
சுற்றுச்சூழல், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இயற்கை கொடுத்த வரமாகவே சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திதுறை கருதப்படுகிறது. தற்போது, காற்று சீசன் துவங்கியுள்ள காரணத்தால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழக மக்கள் பயன்பாட்டிற்கு போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது தமிழ்நாடு மின்வாரியம்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மூன்று மாதங்களும் காற்று சீசன் இருக்கும் என்ற காரணத்தால் இயற்கையாக கிடைக்கும் காற்றை பயன்படுத்தி எவ்வளவு மின் உற்பத்தி செய்ய முடியுமோ அதை செய்து தமிழக மக்கள் பயன்பாட்டுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.
தமிழக பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் ஈட்டும் நடவடிக்கை தொடர வேண்டும். இந்த நடவடிக்கை அதிக நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் தமிழக மின்வாரியத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு வருவாய் ஈட்ட வாய்ப்பாக அமைந்துள்ளது.
வருவாய் ஈட்டுவது ஒருவரும் இருந்தாலும், இயற்கையாக கிடைக்கும் காற்றை முழுமையாக பயன்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.