வடிவேலு கூறுவதைப் போன்று நானும் ரவுடி நானும் ரவுடி என அண்ணாமலை சொல்லிக் கொள்கிறார்: பால்வளத்துறை அமைச்சர் நாசர் விமர்சனம்!

ஆவின் பாலகத்தை திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நடிகர் வடிவேலு கூறுவதைப் போன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நானும் ரவுடி நானும் ரவுடி என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார் என்று விமர்சித்துள்ளார்.


கோவை: ஆவின் பாலகத்தை திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நடிகர் வடிவேலு கூறுவதைப் போன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நானும் ரவுடி நானும் ரவுடி என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார் என்று விமர்சித்துள்ளார்.



கோவை பால் கம்பெனி பகுதியில் புனரமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆவின் பாலகத்தை, பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் ஆவின் பால் உற்பத்தியும், விற்பனையையும் அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் மூழ்கிப்போன ஆவினை இன்றைய தினம் மூழ்கிய கப்பலை நீர்மூழ்கி கப்பல் ஆக மாற்றி வருகிறோம். அதன் உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் முழுவதும் ஆவின் நிலையங்களை துவக்கி வைத்து வருகிறோம். மேலும் இன்று விவசாய உற்பத்தியை மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகரில் இன்று ஒரு கோடி மதிப்புள்ள ஆவின் பாலகம் திறந்து வைத்துள்ளோம்.

ஆவின் பணியிடங்கள் பொறுத்தவரை கடந்த காலங்களில் முறைகேடான முறையில் வேலைவாய்ப்பு துறையின் விதிகளை மீறி ஆட்களை நிரப்பும் பணியை மேற்கொள்ளப்பட்டது. தற்போது முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தப் பணியை நிறுத்தி வைத்துள்ளார்கள். அந்த பணிகள் முறைப்படுத்தி துவங்க உள்ளது. ஆவின் சேர்மன் பொறுத்தவரை ஒட்டுமொத்த தீர்மானம் ஏற்றி கலைத்துவிட்டோம். அதனுடைய கோப்பு கவர்னர் கையெழுத்துக்காக காத்திருப்பதாகவும், கையெழுத்து போட்டவுடன் சேர்மன் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி திருப்பத்தூரில் புதிய பால் பண்ணை திறக்கப்பட இருக்கிறது. லஞ்ச ஒழிப்பு துறை பற்றிய கேள்விக்கு, விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும், யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆவின் பாலகங்களில் ஏதேனும் தவறுகள் நடப்பதாக தகவல் வந்தால் ஆய்வு செய்து சீல் வைக்கப்படும்.

ஆவின் பாலகத்தில் சிக்கன் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. இதில் மூன்று கடைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் ஹெல்த் மிக்ஸ் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகார் கருத்துக்கு வழக்கு தொடர வாய்ப்புள்ளது. எங்களுடைய தரத்திற்கு ஏற்றவாறு பேசினால் அவருக்கு பதிலளிக்கலாம். அவர் நோட்டாவை விட கம்மியா ஓட்டுகள் வாங்கியவர். அண்ணாமலை தவறான கருத்தையும் தன்னிலை முன்னிலை படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக நானும் இருக்கிறேன் என வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல் நானும் ரவுடி நானும் ரவுடி என கூறி வருவதாக விமர்சித்தார்.

ஹெல்த் மிக்ஸ் விற்பனை இன்னும் தொடங்கவே இல்லை. அதற்கு முன்பே 27 கோடிக்கு வாங்கி விட்டார்கள் என அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் அவருக்கு அதற்கான அரிச்சுவடி கூட தெரியாது. எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை எனக் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டை காட்டிலும் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...