ஆபரேஷன் 2.O: கோவையில் ஒரே நாளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது - 3.35 கிலோ கஞ்சா பறிமுதல்…!

நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாவட்டம் முழுவதும் 6 பேர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 3.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.








கோவை: ஆப்ரேஷன் 2.O என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாவட்டம் முழுவதும் 6 பேர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 3.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அணிஷ் என்கின்ற சேட்டன் (40) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்,அதேபோல் ஆனைமலை காவல் நிலைய எல்லையில், கேரளா மாநிலம் செமணாம்பதியைசேர்ந்த அலி (54), பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை எல்லைக்குட்பட்ட கீரணத்தம் பகுதியில் ராம்குமார் (19), மேலும் காங்கேயம்பாளையம் சோதனைச் சாவடி பகுதியில் ரவீந்திரதாஸ் (46) என்பவரை சூலூர் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், ஈச்சனாரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அமர்நாத் என்பவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர்.மேலும், கோவை மாநகர்செட்டிபாளையம் - ஈச்சனாரி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிள்ளையார்புரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி (39) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்து விற்பனைக்கு எடுத்து வந்த பிக்கப் வேன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பிடிக்கப்பட்ட 6 பேரும் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 3.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...