மசாஜ் சென்டர் பெண் உரிமையாளர் மற்றும் ஒர்க்‌ஷாப் இளைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞர்களை கூண்டோடு பிடித்த போலீசார்!

கோவையில் பட்டப்பகலில் மசாஜ் சென்டர் பெண் உரிமையாளர் மற்றும் ஒர்க்‌ஷாப் இளைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பட்டப்பகலில் மசாஜ் சென்டர் பெண் உரிமையாளர் மற்றும் ஒர்க்‌ஷாப் இளைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூரில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மினி என்பவர் சூலூரில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டரில் ஆயுர்வேத மூலிகை எண்ணெய் பயன்படுத்தி முட நீக்கியல் செய்து வருகிறார்.

இந்த நிலையில் மினி, அவரது அண்ணி வீட்டில் இருந்த போது, இரண்டு வாலிபர்கள் தங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது 30 வயது குறைவான ஆண்களுக்கு மசாஜ் செய்வது இல்லை என்றும் மசாஜை பொறுத்தவரையில் சென்டரில் மட்டுமே செய்து வருவதாக, மினி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தொடர்ந்து அந்த இளைஞர்கள் மசாஜ் சென்டர் உரிமையாளர் மினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர், அந்த இளைஞர்கள் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் இதே போன்று இளைஞர்கள் வந்து மசாஜ் செய்யும்படி கேட்டு, பின்னர் மிரட்டி பணம், செல்போன் பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளதால், முன்னெச்சரிக்கையாக மினி அந்த இளைஞர்களை வீட்டின் உள் விடாமலே வாசலில் வைத்து பேசியுள்ளார்.



அப்போது அந்த இளைஞர்கள் வீட்டுக்கு வர முயன்ற நிலையில், மினி தடுக்க முயற்சித்த போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மினியை தாக்கியுள்ளனர். வலியால் மினி கூச்சலிட, அந்த வாலிபர்கள் தப்பி ஓடினர்.

கையில் காயம் ஏற்பட்ட மினி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கத்திக்குத்துக்கு உள்ளான மினி அளித்த புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படை போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பீளமேடு பகுதியில் ரவிக்குமார் என்ற ஒர்க்ஸாப் தொழிலாளியின் செல்போனை பறித்து தப்ப முயன்ற நிலையில் ரவிக்குமாரை ஒரு சில இளைஞர்கள் வெட்டியதாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டு பீளமேடு போலீசார் குற்றவாளியை தேடிக் கொண்டிருந்தனர்.

ஒரே நாளில் இரண்டு வெட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த, சிங்காநல்லூர் மற்றும் பீளமேடு போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது மாநகர போலீசார் முள்ளுக்காடு பகுதியில் நண்பர்களுடன் பதுங்கியிருந்த மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளை கூண்டோடு பிடித்தனர்.

விசாரணையில், மணிகண்டன் தான் இரண்டு குற்றங்களையும் செய்தது உறுதியானது. மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களான குனியமுத்தூரை சேர்ந்த இளவரசன் (20), விஷ்வா (25), நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த அபி விஷ்ணு (23) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்ட மணிகண்டன் தனது நண்பர்களுடன் ஆயுதங்களை வைத்துக் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன் காந்திமா நகர் பகுதியில் பட்டப்பகலில் பொதுமக்களை தாக்கியுள்ளனர். இதற்கு, மாநகர போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகரில் அடுத்தடுத்து இரண்டு பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...