கோவையில் 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்கு தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு!

கோவையில் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்காக தோண்டப்பட்ட சாலையை விரைவில் சரி செய்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்காக தோண்டப்பட்ட சாலையை விரைவில் சரி செய்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பெர்க்ஸ்‌ பள்ளி அருகே பாதாள சாக்கடை மற்றும்‌ 24 மணி நேர குடிநீர்‌ விநியோக பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரிசெய்து, பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., உத்தரவிட்டார். உடன்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள்‌ சுந்தர்ராஜன்‌, ராமசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர்‌ ஆதிமகேஸ்வரி திராவிட மணி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஜி.வி.ரெசிடென்சி பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ முறையாக உள்ளதா மற்றும்‌ தெருவிளக்குகள்‌ எரிகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...