கோவையில் நகர்புற நலவாழ்வு மையம், மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணி: அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு..!

மத்திய மண்டல பகுதியில்‌ ரூ.10.22-கோடி மதிப்பீட்டில்‌ 2-இடங்களில்‌ தலா ரூ.25-இலட்சம்‌ வீதம்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணிகள்‌ மற்றும்‌ 3-இடங்களில்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் நகர்புற நலவாழ்வு மையம், மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல பகுதியில்‌ ரூ.10.22 கோடி மதிப்பீட்டில்‌ 2 இடங்களில்‌ தலா ரூ.25 இலட்சம்‌ வீதம்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணிகள்‌ மற்றும்‌ 3 இடங்களில்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பணியினை தொடங்கி வைத்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டல பகுதியில்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணிகள்‌ மற்றும்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி இன்று (17.06.2022) பணியினை தொடங்கி வைத்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.68க்குட்பட்ட காந்தி நகர்‌, வார்டு எண்‌.62க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம்‌ பகுதியில்‌ தலா ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணியினையும்‌,



வார்டு எண்‌.47க்குட்பட்ட நேரு வீதியில்‌ ரூ.3.08 கோடி மதிப்பீட்டில்‌, 28 இலட்சம்‌ லிட்டா்‌ கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌,



வார்டு எண்‌.67 க்குட்பட்ட வ.உ.சி பூங்கா அருகில்‌ ரூ.4.64 கோடி மதிப்பீட்டில்‌, 42.200 இலட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌,



வார்டு எணி்.82க்குட்பட்ட டவுன்ஹால்‌ பகுதியில்‌ ரூ.2 கோடி மதிப்பீட்டில்‌, 19.70 இலட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட (மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌, ஆகமொத்தம்‌ ரூ.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணியினையும்‌, ரூ.9.72 கோடி மதிப்பீட்டில்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷா்மிளா, மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, மேற்கு மண்டலத்‌ தலைவர்‌ ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர்‌ சங்கர்‌, முன்னாள்‌ பேரூராட்சித்தலைவர்‌ பையா கிருஷ்ணன்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினா்‌ நா.கார்த்திக்‌, நிலைக்குழுத்‌ தலைவர்கள்‌ சாந்தி முருகன்‌ (பணிகள்‌), வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), சோமு (௭) சந்தோஷ்‌ (நகரமைப்பு), பெ.மாரிசெல்வன்‌ (பொது சுகாதாரம்‌), மாமன்ற உறுப்பினர்கள்‌ கமலாவதிபோஸ்‌, பேபிசுதா ரவி, ஆர்‌.வித்யா, ரேவதி முரளி, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலா்‌ இராமச்சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...