கோவை நஞ்சுண்டாபுரத்தில் 25-லட்சம் மதிப்பில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டும் பணி: அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு..!

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நகர்புற நலவாழ்வு மையம் இருந்து வரும் நிலையில், தற்போது இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள், சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: நஞ்சுண்டாபுரத்தில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

கோவை மாநகர் நஞ்சுண்டாபுரம் காந்தி நகர் பகுதியில், நகர்புற நலவாழ்வு மையம் அமைக்கும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

25-லட்சம் மதிப்பில் இந்த நகர்புற நல வாழ்வு மையம் கட்டப்பட உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நகர்புற நலவாழ்வு மையம் இருந்து வரும் நிலையில், தற்போது இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கூடிய விரைவில் மையத்தினை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...