கோவை பெரிய தடாகம் பகுதியில் 1.25-கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணி: அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு..!

கோவை ஆனைகட்டி சாலை பெரிய தடாகம்-மாங்கரை பகுதியில் பாலங்கள் கட்டப்படுவதால் மழைநீர் பாலத்தின் அடியிலும், வாகனங்கள் பாலத்தின் மேலேயும், எவ்வித இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வழிவகுக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பெரிய தடாகம் பகுதியில் 1.25-கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

கோவை ஆனைகட்டி சாலை பெரிய தடாகம்-மாங்கரை பகுதியில் 1.25-கோடி மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணியை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

அப்பகுதியில் மழை காலங்களில் சில நேரங்களில் மலைகளிலிருந்து அதிக அளவு மழை நீர் பெருக்கெடுத்து செல்லும் பொழுது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படும். தற்பொழுது இப்பாலங்கள் கட்டப்படுவதால் மழைநீர் பாலத்தின் அடியிலும், வாகனங்கள் பாலத்தின் மேலேயும் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வழிவகுக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...