அதிமுக தலைமை OPS ஆ..? EPS ஆ..? தொடரும் போஸ்டர் யுத்தம்.. திருப்பூரில் OPS-ஆதரவாளர்களின் போஸ்டரில் EPS-படம்..!

பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் ஒட்டி வரும் வேளையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒட்டப்பட்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களின் போஸ்டரில் இபிஎஸ் படம் இடம் பெற்றிருந்தது.


திருப்பூர்: அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமையே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தொடர்ந்து போஸ்டர் யுத்தம் நடத்தி வருவது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், கட்சிக்கு ஒற்றை தலைமையே வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் குரல் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் ஒரே தலைமை என்ற கோரிக்கை வலுவாக இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

திருப்பூரில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பழைய பேருந்து நிலையம், சிடிசி கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்களில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரே, ஒற்றை தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வாருங்கள்" என்றும், "தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமை ஓபிஎஸ் தலைமையே" என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், வெகுநாட்களாகவே ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையே கோஷ்டி பூசல் நிலவி வந்தது. ஆனால், அப்போதெல்லாம் அதுபோன்ற சூழல் இல்லை என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது ஒற்றைத் தலைமை கோரிக்கை அக்கட்சியில் தலைதூக்க தொடங்கி இருக்கிறது.

இதனால் மூடிமறைக்கப்பட்ட கோஷ்டிப் பூசல் இந்த போஸ்டர் யுத்தம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் ஒட்டி வரும் வேளையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒட்டப்பட்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களின் போஸ்டரில் இபிஎஸ் படம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...