நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளையில் செங்கல் திருடியவர்கள் கைது: கனிமவள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

கோவையில் உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளையில் செங்கல் திருடியவர்களை தடாகம் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது கனிமவள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளையில் செங்கல் திருடியவர்களை தடாகம் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது கனிமவள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்து சீல் வைத்துள்ளது.



இந்நிலையில் இன்று மாலை வீரபாண்டி அருகே உள்ள உமா என்ற தனியார் செங்கல் சூளையில் திருட்டுத்தனமாக லாரியில் (TN 20 AA 9599) செங்கல்களை ஏற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் தலைமையிலான காவல்துறையினர் செங்கல் திருட்டில் ஈடுபட்டு வந்த லாரி ஓட்டுநர் கருப்பசாமி (40) மற்றும் கருப்பசாமி(20) ஆகிய இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு கனிமவள சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.



மேலும் லாரியின் உரிமையாளர் பரசுராமன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் கார்த்திக் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பரசுராமன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...