கோவையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியரின் மனைவியிடம் 5-பவுன் செயின் பறிப்பு…!

புகார் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன்னதாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் செயின் பறித்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை விளாங்குறிச்சி சாலை கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (64).

இவர் வழக்கமாக தினமும் மாலையில் வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே இருந்த சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது ஜெயலட்சுமி வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்து உள்ளனர்.

அதில் ஒருவர் ஜெயலக்ஷ்மி வரும் பாதைக்கு எதிரே நடந்து வந்துள்ளார். அப்போது ஜெயலட்சுமி அருகே வந்ததும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு நபரிடம் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் ஜெயலட்சுமி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜெயலட்சுமியை மீட்டுள்ளனர். பின்னர் அவர் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன்னதாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...