எதிர்காலங்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - மத்திய அமைச்சர் முரளிதரன்..!

எதிர்காலங்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் அமையும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவிட் காலகட்டத்திலும் வெளிநாடுகளில் தத்தளித்த இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவதில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.



குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின்(தனியார்) சார்பில் 'பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சகாப்தத்தில் இந்திய வெளியுறவு கொள்கையின் வெற்றி வரலாறு' என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர்.

இதில், மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியுறவு துறை சார்ந்து பாஜக அரசால் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உலக அளவில் இந்தியாவின் பெருமை வளர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.



பின்பு சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன், பல தலைமுறைகளுக்கு முன்னால் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் தற்போது தங்களையும் இந்தியர்கள் என குறிப்பிட வேண்டும் என ஆசைப்படுகின்றனர் எனவும் அதுவே எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறந்த செயல்பாடாக நான் கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.



உக்ரைன் போர் சூழலிலும், ஏமன் நாட்டில் ஏற்பட்ட பதட்டமான காலங்களிலும், கோவிட் காலகட்டத்திலும் வெளிநாடுகளில் தத்தளித்த இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவதில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எதிர்காலங்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் அமையும் என கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சமீபத்திய நிகழ்வுகளால் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உறவுகளில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...