கோவை வால்பாறை அருகே அழுகிய நிலையில் சிறுத்தை குட்டியின் உடல் கண்டெடுப்பு..!

சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால் காட்டுப்பன்றிகள் கடித்து இருக்கலாம் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்த சிறுத்தை குட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து தீ வைத்து எரித்தனர்.


கோவை: வால்பாறை அருகே அழுகிய நிலையில் சிறுத்தை குட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 1-வது தேயிலைத் தோட்ட பிரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்பகுதியில், துர்நாற்றம் வீசியதால் வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் அவர்களுக்குத் தகவல் கொடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு தேயிலை செடிக்கு அருகில் இறந்து பல நாட்கள் அழுகிய நிலையில் சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது. அதை அடுத்து சிறுத்தை குட்டியை எடுத்து மனித வன விலங்கு மோதல் தடுப்பு மையத்தில் ஆய்வு செய்தனர்.



ஆனைமலை புலிகள் காப்பக கள இணை இயக்குநர் அறிவுறுத்தலின் படி ACF-செல்வம் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் NCF கணேஷ் ஆகியோர்கள் ஆய்வு செய்தனர். சிறுத்தை குட்டி ஆண் குட்டி என்பதும் 6 மாதங்கள் ஆகிய நிலையில் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.



மேலும் சிறுத்தையின் உடலில் காயங்கள் உள்ளது. காட்டுப்பன்றிகள் கடித்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர் இறந்த சிறுத்தை குட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து தீ வைத்து எரித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...